வெள்ள நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
வெள்ள நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!;
Update: 2024-01-09 06:37 GMT
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
புதுக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் த. செங்கோடன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர் கே.ஆர். தர்மராஜன், மாவட்டப் பொருளாளர் ஜீவானந்தம், மாவட்ட என்.ஆர். ஏஐடியுசி பொதுச் செயலர் ப. ஜீவானந்தம், கௌரவத் தலைவர் வீ. சிங்கமுத்து, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஏ. ரங்கராஜ், மாநிலக் குழு உறுப்பினர் எஸ். நடராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர். இதேபோல, அறந்தாங்கி அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் துணைச் செயலர் ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அறந்தாங்கி ஒன்றியச் செயலர் ஆர்.ராதாகிருஷ்ணன், நகரச் செயலர் கே. அஜாய்குமார் கோஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர்.