மகளிருக்கான இலவச பேருந்து பிரேக் பிடிக்காததால் சாலையோரம் சிக்கியது

பொன்னேரியில் மகளிருக்கான இலவச பேருந்து பிரேக் பிடிக்காததால் சாலையோரம் சிக்கி நின்றது.;

Update: 2024-06-15 13:33 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்திலிருந்து மகளிருக்கான இலவச அரசு பேருந்து பொன்னேரி ஆலாடு தத்தைமஞ்சி காட்டூர் வழியாக மீஞ்சூர் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் 40 பயணிகளுடன் பொன்னேரியில் இருந்து சென்று கொண்டிருந்த நிலையில் பொன்னேரி அடுத்த ஆலாடு ரயில்வே கேட்டை கடந்த போது பிரேக் பிடிக்காததால் எதிரே பழுதடைந்து நின்று கொண்டிருந்த மினி லாரி மீது இடித்து பேருந்து கூடவே இழுத்துச் சென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கி மணலில் சிக்கி நின்றது.

Advertisement

இதில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டமாக காயம் இன்றி உயிர் தப்பித்த நிலையில் பேருந்தில் பயணித்தவர்கள் கூச்சலுடன் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றனர் இது குறித்து பேருந்தில் பயணித்த ஒருவர் தெரிவித்ததாவது இந்த தடம் வழியாக செல்லும் அரசு பேருந்து பழமையான பேருந்து எனவும் அடிக்கடி பிரேக் டவுன் ஆகி நிற்பதாகவும் பராமரிப்பு இல்லை எனவும் புதிய வகை பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தெரிவித்தனர்

Tags:    

Similar News