வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் நிறைவு
வண்ணாரப்பேட்டையில் பழரசத்துடன் உண்ணாவிரத போராட்டம் முடிவு பெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-25 09:57 GMT
காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தின் சிஐடியு தொழிற்சங்கத்தினர் நெல்லை வண்ணாரப்பேட்டையில் நேற்று காலை 10 மணிக்கு 24 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.
இரவு விடிய விடிய உண்ணாவிரதம் இருந்த நிலையில் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன் இன்று (ஜூன் 25) காலை 10 மணிக்கு தொழிலாளர்களுக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.