லாரியில் இருந்து தவறி விழுந்த லோடு மேன் பலி

தூத்துக்குடியில் லாரியில் இருந்து தவறி விழுந்த லோடு மேன் பரிதாபமாக பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-15 01:51 GMT

 பலி

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6வது தெருவைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் உதயகுமார் (46). இவர் லாரியில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 12ஆம் தேதி தூத்துக்குடி ஜிசி ரோட்டில் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு லாரி மேல் தார்ப்பாய் போட்டு கட்டிக் கொண்டு இருந்தாராம்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி லாரியிலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News