தந்தையை அவதூறாக பேசியவர் அதிரடி கைது
நெல்லையில் தந்தையை அவதூறாக பேசியவர் அதிரடி கைது.
Update: 2024-03-22 06:28 GMT
நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் பிரான்சிஸ். முத்துப்பாண்டி இல்லாத நேரத்தில் பிரான்சிஸ் வீட்டின் கதவை சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து முத்துப்பாண்டி பிரான்சிஸ்டம் கேட்டதற்கு எனது பங்கிற்கான வீட்டை ஒதுக்குமாறு அவசரமாக பேசி மிரட்டி உள்ளார். இது குறித்து முத்துப்பாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் மானூர் போலீசார் பிரான்சிஸை நேற்று (மார்ச் 21) கைது செய்தனர்.