திண்டுக்கல்லில் கழிவுநீர் பாலம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த மேயர்
திண்டுக்கல் மாநகராட்சி கோட்டைகுளம் ரோட்டில் கழிவுநீர் பாலம் அமைக்கும் பணியையும் மற்றும் சிமெண்ட் ரோடு அமைக்கும் பணியையும் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் ஆய்வு செய்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-06-30 09:08 GMT
திண்டுக்கல் மாநகராட்சி கோட்டைகுளம் ரோட்டில் நேருஜி நகராட்சி மேல்நிலைப்பள்ளி பின்புறம் இருந்து காந்தி மார்க்கெட் வழியாக கழிவு நீர் முறையாக செல்வதற்காக கழிவுநீர் பாலம் அமைக்கும் பணியையும் மற்றும் சிமெண்ட் ரோடு அமைக்கும் பணியையும் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் நேற்று (ஜூன் 29) பார்வையிட்டு விரைவாக பணிகளை முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.