பரவாய் கிழக்கு பகுதியில் ரேசன் கடையை திறந்து வைத்த அமைச்சர்
பரவாய் கிழக்கு பகுதியில் ரேசன் கடையை அமைச்சர் திறந்து வைத்து பொருட்கள் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாய் கிழக்கு பகுதியில் முழு நேர கூட்டுறவு நியாய விலை கடை அங்காடியினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு குடிமை பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் பேசியதாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது மக்களின் கோரிக்கைகள், அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு அதனை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள்.த
மிழ்நாடு முதலமைச்சர் பொது மக்களின் கோரிக்கைகள், அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு அதனை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள். அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆயக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் செயல்படும் பரவாய் முழுநேர அங்காடியில் 1,187 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. பரவாய் கிழக்கு பகுதியில் வசிக்கும் 505 குடும்ப அட்டைதாரர்கள் 1.5 கி.மீ நடந்து வந்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுச் சென்றனர். இந்நிலையில் பரவாய் நியாய விலை கடையில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும்,
வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 1.5 கி.மீ தூரம் நடந்து வந்து பொருட்களை பெற்றுச் செல்வதில் இருந்த சிரமத்தினை குறைக்கும் பொருட்டு பரவாய் கிழக்கு பகுதியில் பரவாய் கிழக்கு என்ற புதிய முழு நேர அங்காடி திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் வசிக்கும் 505 குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும்,
பொதுமக்கள் நலன் கருதியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் முறையாக, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.