அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம்

திருப்பூரில் கனிமவளத்துறை ஆய்வாளரை மிரட்டியது தொடர்பாக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-03-12 09:02 GMT

திருப்பூரில் கனிமவளத்துறை ஆய்வாளரை மிரட்டியது தொடர்பாக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

கனிமவளத் தறை ஆய்வாளரை மிரட்டும் திமுக அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளரின் உதவியாளர்கள். அமைச்சர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி. திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் இடையன்கிணறு  பகுதியில் கடந்த 28-ம் தேதி  கனிமவள துறை சிறப்பு வருவாய் ஆய்வாளர்  சிவசக்தி என்பவர் வாகன சோதனையின் போது  நம்பர் பிளேட் இல்லாமல்  எந்த ஆவனமும் இல்லாமல் கனிம வளங்கள் ஏற்றி வந்த லாரியை பிடித்து நடவடிக்கை எடுக்க முயன்ற போது, செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் நேர்முக உதவியாளர் வினோத் ,செல்லமுத்து ஆகியோர் போனிலும், வாட்ஸ் அப்பிலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கூறியும், திமுகவினர்கள் அதிகாரியை நேரில் சென்று மிரட்டியும் அச்சுறுத்தியும்,  அதிகாரி நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்த நிலையில் உன்னை துரத்தி அடிக்காமல் விடமாட்டேன் இரண்டு நாளில் உன்னை தூக்கி அடிக்கிறேன் என்று மிரட்டி உள்ளனர்.

திமுக அரசியல் அழுத்தம் காரணமாக வருவாய் அதிகாரி சிவசக்தி அதிரடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.  எந்த ஒரு அவமானமும் இல்லாத வாகன எண் கூட இல்லாத சட்டவிரோதமாக கனிம கடத்தல் வாகனத்தை பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் இருந்த அதிகாரியை கடந்த ஐந்தாம் தேதி தொடர் அழுத்தத்தின் காரணமாக பணியிட மாறுதல் செய்துள்ளனர்,தன் கடமையை நேர்மையாக செய்த அதிகாரிக்கு பரிசாக சட்டவிரோத கல்குவாரி கும்பலுக்கு ஆதரவாக இயற்கை கொள்ளைக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் அதிகாரியை பணியிடமாற்றம் செய்துள்ளது.

இந்த கனிம வள கொள்ளை தொடர்பாக அனைத்து சட்ட விரோத நிகழ்வுகளும் தொடர்புள்ளஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்,அமைச்சரின் நேர்முக உதவியாளர்கள் செல்போன்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், அமைச்சர் உதவியாளர்கள் வினோத் மற்றும் செல்லமுத்து, மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட கனிம துறை துணை இயக்குநர் பெருமாள் ஆகியோர்கள்  திட்டமிட்டு கூட்டுசதியில் ஈடுபட்டு அரசு பணியை கனிம வள கொள்ளைக்கு ஆதரவாக, சுயலாபத்திற்காக தவறாக பயன்படுத்தியது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் விரிவான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன்,தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News