தேர்தல் பணியாற்றியவர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்து அறிக்கை

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றிய தி.மு.க., கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-04-25 01:22 GMT

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியாற்றிய தி.மு.க., கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழ்நாடு முதலமைச்ச ரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுசிறப்புதிட்ட செயலாக்கத்துறை அமைச்சரும், இளைஞர் அணி செயலாளரு மான உதயநிதி ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்ளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்திட்ட தி.மு.க. மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் என்னுடைய மனமார்ர்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News