வாழை மரம் தளிர் விட்டு குலை தள்ளிய அதிசயம்
கடந்த 3 மாதங்களுக்கு முன் கோயிலில் கட்டப்பட்ட வெட்டிய வாழை மரம் தற்போது தளிர் விட்டு குலை தள்ளிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் சுமார் 300 ஆண்டுகள் பழமையான நடராஜர் திருக் கோயில் உள்ளது. இங்கு கடந்த மார்கழி மாதம் நடந்த திருஆதிரை ஆருத்ரா வழிபாட்டின் போது கோயில் மண்டப வளாகத்தில் இரண்டு வாழை தோப்பிலிருந்து வெட்டியை வாழை மரங்கள் சிமிண்ட் தரையில் கட்டப்பட்டது.
தொந்தரவு இன்றி உள்ளே இருந்ததால் தற்போது வரை வாழை மரங்கள் அகற்றப்படவில்லை. இதனால் இரண்டு மரங்களும் வாடிய நிலையில் இருந்தது.இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின்னர் தற்போது திடீரென இரண்டு வாழை மரத்தில் ஒன்று தளிர் விட்டு குலை தள்ளி உள்ளது. மேலும் மரங்களின் உள் பகுதியில் இலைகளும் தளிர்த்து வருகிறது.
இந்த அதிசய நிகழ்வை அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். குலை தள்ளிய மரத்திற்கு மாலை அணிவித்து வழிபாடும் நடத்தப்பட்டது.