வேலூர் அருகே விபத்து ஏற்படுத்திய நபர் கைது

வேலூர் அருகே விபத்து ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2024-02-27 16:31 GMT

 கைது

வேலூர் அருகே விபத்து ஏற்படுத்திய நபர் கைது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுரேஷ் பாபு (வ/44) என்பவர் பெருமுகையில் இருந்து CMC மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அலுமேலுமங்காபுரம் அருகே உள்ள துரோபதி அம்மன் கோவில் எதிரில் சென்று கொண்டு இருந்தபோது எதிரே காரில் வந்த ரகுமான் (வ/25) த/பெ ரமேஷ் என்பவர் சுரேஷ் பாபுவு முந்தி செல்ல ஹாரன் அடிக்காமல் சென்றதனால் சுரேஷ் பாபுவின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் சுரேஷ்பாபு விபத்து ஏற்படுத்தியவர் மீதுநடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் உட்கோட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு மேற்பார்வையில் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் ராஜா விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இரகசிய தகவலின் அடிப்படையில் ராகுமானை கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News