அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி!

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-12-08 10:18 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி கேவிகே நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரப்பன் மகன் பட்டுராமன் (45). இவர் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒர்க்ஷாப்பில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்து கிடந்தார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News