கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை
பாலக்கோடு அருகே மது போதையில் 50 அடி விவசாயி கிணற்றில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு காவல் துறையினர் விசாரணை;
Update: 2024-02-12 06:27 GMT
காவல்துறையினர் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த துப்பாக்சிகாரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வம் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு வந்தவர். சிறிது நேரம் கழித்து வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. நேற்று அதிகாலை அதே பகுதியில் உள்ள முருகன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழ விவசாய கிணற்றில் செல்வம் பிணமாக மிதந்தார்.அந்த வழியாக சென்றவர்கள் பாலக்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த னர்.செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் எப்படி இறந்தார் என்பது குறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் செல்வம் மது போதையில் இருந்ததாகவும் மது போதையில் தவறி கிணற்றில் விழுந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.