குழியில் இறங்கிய லாரியை ஜேசிபி இயந்திரம் வைத்து அகற்றிய காவல்துறையினர்
Update: 2023-12-23 10:21 GMT
கோவை: பாதாள சாக்கடை திட்டம், சூயஸ் குழாய் அமைக்கும் பணி என பல்வேறு வரும் நடைபெற்று வரும் நிலையில் ஆங்காங்கே சாலைகள் தோண்டபட்டுள்ளது.இதனால் பிரதான சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது மக்கள் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி சாலையின் முக்கிய சந்திப்பான ராமநாதபுரம் சிக்னல் அருகே பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று தோண்டப்பட்ட குழி சரியாக மூடப்படாமல் மண் கொண்டு மூடப்பட்ட நிலையில் சிக்கி கொண்டது.லாரி ஓட்டுனர் எவ்வளவு முயற்சித்தும் வாகனத்தை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து காவலர்கள் அருகில் பாதாள சாக்கடை பணியில் ஈடுபட்டு இருந்த ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து குழியில் சிக்கிய லாரியை அப்புறபடுத்தினர்.இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருச்சி சாலை,அவினாசி சாலை, போத்தனூர் சாலை உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளபட்டு வரும் சாலை பணிகளின் காரணமாக நெரிசலில் சிக்கி தவித்து வரும் நிலையில் பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.