பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
Update: 2024-05-21 08:31 GMT
இந்துக்களின் புனித பண்டிகையாக கொண்டாடப்படும் வைகாசி விசாகம் நாளை கொண்டாடப்படும் நிலையில் தென்காசி, சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது,அதன்படி ஒரு கிலோ மல்லிகை பூ நேற்று 600 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் இன்று 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் பிச்சிபூ 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நிலையில் இன்று 1000 ரூபாய்க்கும் கனகாமரம்: 1000 கேந்தி: 100 கோழி பூ:150 செவ்வந்தி: 150 தாமரை பூ : 10 ஊட்டி ரோஜா : 200 சம்மங்கி பூ: 120 கொழுந்து : 100 வாட மல்லி: 100 அரளி: 200, நந்தியாவட்டம் : 400 உள்ளிட்ட அனைத்து பூக்களும் வரத்து குறைவால் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது தற்போது தென்காசி மாவட்டத்தில் பூக்களின் வரத்து குறைந்து உள்ளதால் விலை உயர்ந்த உள்ளது எனவும் இதனால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் தொடர்ந்து சுப முகூர்த்தம், கோவில் திருவிழாக்கள் நடைபெற உள்ளதால் இன்னும் பூக்களின் விலை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.