திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் புடலங்காய் விலை உயர்வு

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் புடலங்காய் விலை அதிகரித்து காணப்பட்டது.

Update: 2024-06-14 15:29 GMT

விற்பனைக்கு வந்த புடலங்காய்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் புடலங்காய் விலை உயர்வு! திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு கடந்த வாரத்தை விட நேற்று புடலங்காய் மற்றும் மற்ற காய்கறிகள் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது.

இதுகுறித்து வியாபாரி கூறியதாவது தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு சுற்றுவட்டார கிராமங்களான மாதப்பூர், பெருமாநல்லூர், பொங்கலூர், சேவூரிலிருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மேலும் வெளிமாவட்டங்களிலிருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்களாக வெயில் மற்றும் மழை மாறி மாறி வருகின்ற காரணத்தினால் காய்கறிகளின் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு அதன் எதிரொலியாக விளைச்சல் குறைந்து விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

மார்க்கெட்டில் விற்பனையான காய்கறிகளின் விற்பனை விபரம் 15 கிலோ எடை கொண்ட புடலங்காய் ரூ. 400,சுரைக்காய் ரூ. 400,பீர்க்கங்காய் ரூ. 1,100,கத்தரி ரூ. 500 முதல் ரூ. 600,அவரை ரூ. 1,500,பீட்ருட் ரூ, 700,கோவைக்காய் ரூ. 250 முதல் ரூ. 300 ஆகிய விலைகளில் காய்கறிகளின் விற்பனையானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்...

Tags:    

Similar News