கணிதத்தின் பங்கு இன்றியமையாதது: இறையன்பு

கணிதத்தின் பங்கு அனைத்துத்துறைகளிலும் இன்றியமையாதது என முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

Update: 2024-01-28 12:38 GMT

விழாவில் பங்கேற்ற இறையன்பு

 வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணித தின விழா மற்றும் மாணவர்களுக்கான கணித போட்டிகளும் நடந்தது .

இதில் 49 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 2600-க்கும்மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர் . வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடந்த இந்த விழாவில், பல்கலைக்கழக துணை தலைவர்கள் சங்கர் ,செல்வம் மற்றும் இஸ்ரோவின் இணை இயக்குநர் விஞ்ஞானி லட்சுமி மற்றும் திரளான பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களும் பங்கேற்றனர் .

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பங்கேற்று கணித போட்டியில் முதலிடம் வென்ற டி.எவி பள்ளிக்கு கோப்பையும் சான்றிதழும் இரண்டாம் இடம் பிடித்த வாலாஜா அரசு மகளிர்பள்ளிக்கு கோப்பையும் வழங்கினார் .

இவ்விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் இறையன்பு பேசுகையில், கணிதம் என்பதன் பங்கு வேதியியல் இயற்பியல் உயிரியல் மற்றும் தொழிற்நுட்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மருத்துவம் ஆகிய அனைத்துத்துறைகளிலும் கணிதத்தின் பங்கு இன்றியமையாதது . மேலும் இன்றைய காலகட்டத்தில் விவசாயத்திற்கும் கணிதம் பயன்படுகிறது .

பயிர்களை மாசில் இருந்து காப்பாற்றவும் பூச்சிகொல்லிகளை தெளிக்கவும் கணிதம் பயன்படுகிறது . ஆனால் கடந்த 6 மாதங்களாக கணிதம் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என பேராசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால் பல கல்லூரிகளில் கணித பாடப்பிரிவு துறையே மூடப்படுகிறது இது ஆபத்தானது இதனை தடுக்க வேண்டுமென்றால் மாணவர்கள் ஆர்வமுடன் கணிதம் பயில வேண்டுமென பேசினார்.

Tags:    

Similar News