காரியாபட்டி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 6 பேர் காயம்
காரியாபட்டி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து நான்கு சிறுவர்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-05-17 15:50 GMT
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ அழகியநல்லூர் கிராமத்தில் ஆனந்தபிரியா என்பவரது வீட்டில் மேற்கூரையில் கனமழை காரணமாக நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இன்று ஆனந்தபிரியா தனது வீட்டில் பிள்ளைகளுடன் இருந்த போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது.
இதில் ஆனந்த பிரியா (25), அவரது குழந்தைகள் ஆருஷ் (8), செவின் (3) மற்றும் உறவினர்கள் அருணா தேவி (27) லோகேஸ்வரி (17), சார்ஜன் (12) உட்பட 6 பேர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.