சிலிண்டர் மாற்றும் போது உடலில் தீப்பிடித்து கடைக்காரர் பலி
சேலத்தில் சிலிண்டர் மாற்றும் போது உடலில் தீப்பிடித்து கடைக்காரர் உயிரிழந்தார்.;
Update: 2024-03-01 17:22 GMT
உயிரிழப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள பேளூர் பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(42). இவர் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அத்வைத ஆஸ்ரமம் ரோட்டில் டீ கடை வைத்துள்ளார். கடந்த 24ம் தேதி கடையில் உள்ள அடுப்பில் சிலிண்டரை மாற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது தீப்பிடித்தது. இதில் படுகாயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்தார். இதுபற்றி அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.