புகார் மனுவை கழுத்தில் மாலையாக அணிந்து மனு அளித்த சமூக ஆர்வலர்
100க்கும் மேற்பட்ட புகார் மனுவை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக ஆர்வலர் கோரிக்கை மனு அளித்தார்.
By : King 24X7 News (B)
Update: 2023-12-08 14:23 GMT
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு கடலாடி சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் என்பவர் கடலாடி ஊராட்சியில் நடைபெற்று வரும் முறைகேடு தொடர்பாக பலமுறை கோரிக்கை மனு மற்றும் புகார் மனுக்களைஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளிக்கப்பட்டது .அவர் அளித்த மனுவின் மீது. இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன் என்பவர் அவர் அளித்த 100க்கும் மேற்பட்ட புகார் மனு அனைத்தும் கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடைசி கோரிக்கை மனு அளித்தார். பின்னர். செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் எங்களது புகார் மனுவை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ,உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது வழக்கின் அடிப்படையில் ,உயர் நீதிமன்றம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் மனு. கோரிக்கை மனு என்ற எந்த ஒரு மனுவை ஏற்கவில்லை மற்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து வரும் மாவட்ட கலெக்டர் முருகேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர் , வட்டாட்சியர். ஆரணி சேர்ந்த கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் செயல்பட்டு வருவதை எங்களுக்கு பெரும் அவமான நிலை ஏற்பட்டு வருகிறது. கொடுத்த புகாரின் மீது மற்றும் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிவித்தார் . கடைசியாக நான் கொடுக்கப் போகும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீதும் உயர்நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும். என்ற வழக்கை நான் தொடர்வேன் என இவ்வாறு தெரிவித்தார். மேலும் கடலாடி ஊராட்சியில் மக்கள் பயன்பாட்டிற்கு பஸ் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைத்தல் ,கொசு மருந்து அடித்தல் ,100 நாள் வேலை திட்டம் மூலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள் பள்ளிகள்,மருத்துவமனை, காவல் நிலையம். உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும். கிராம நிர்வாகம் , வருவாய் ஆய்வாளர் அலுவலகம். மற்றும் அலுவலகத்தில் குடிநீர் . கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் . மேலும் ஊராட்சி மன்ற தலைவர் செய்து வரும் குற்றங்களை தடுத்து நிறுத்தி மக்களுக்கு அடிப்படை வசதிகளையும் ,அரசாங்கம் வழங்கக்கூடிய இலவச சலுகைகள் அனைத்தும் செய்து கொடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இது கடைசி மனுவாக அளிக்கிறேன் என அதிகாரிகளிடம் கூறி கோரிக்கை மனுவை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டுஅவர் l மனுவினை அளித்தார் .