நெல்லையில் தொடர்ந்து நடைபெறும் மாணவர்கள் போராட்டம்

திருநெல்வேலியில் கட்டிடத்தை புதுப்பித்தல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-03-12 09:32 GMT

திருநெல்வேலியில் கட்டிடத்தை புதுப்பித்தல் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திருநெல்வேலி மாநகர அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் உள்ளிட்ட ‌பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒருவாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டமானது இன்றும் (மார்ச் 12) தொடர்ந்து வருகின்றது. இதில் மாணவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியும் ,கோரிக்கை அட்டையை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News