கீழே கிடந்த போனை போலீசிடம் ஒப்படைத்த மாணவர்கள்!
கலவை அருகே சாலையில் கீழே கிடந்த செல்போனை மாணவர்கள் போலீசில் ஒப்படைத்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.;
Update: 2024-06-13 01:39 GMT
கலவை அருகே சாலையில் கீழே கிடந்த செல்போனை மாணவர்கள் போலீசில் ஒப்படைத்த செயல் பாராட்டை பெற்றுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் ஜோதீஸ்வரன், கமலேஸ்வரன் ஆகிய இருவரும் காலை பள்ளிக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு சாலை ஓரம் செல்போன் கிடைத்துள்ளது.அதனை மாணவர்கள் இருவரும் எடுத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து போலீசார் அந்த மாணவர்களை பாராட்டி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.