மணப்பாறை அருகே இறந்தவரின் உடலை வாய்க்காலில் தூக்கி செல்லும் அவலம்
மணப்பாறை அருகே பாதையின்றி இறந்தவரின் உடலை வாய்க்காலில் தூக்கி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-06 15:53 GMT
உடலை தூக்கி செல்லும் அவலம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மாங்கனாபட்டி கிராமம் வடக்கு களத்தைச் சேர்ந்தவர் வீரன் என்ற ஆண்டி (65) உடல் நிலை சரியில்லாமல் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்த நிலையில் நேற்று அவரது உடல் தகனம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.
சுடுகாட்டிற்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உடலை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக பாதை இல்லாமல் இருப்பதால் அங்குள்ள வாய்க்கால் வழியாக கடும் சிரமத்தோடு உடலை பாடையில் வைத்து சுமந்து கொண்டு சென்றனர். நீண்ட ஆண்டுகாலமாக பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பாதை வசதி இல்லாத நிலையில் உடலை வாய்க்கால் வழியாக மிகுந்த சிரமத்தோடு தூக்கி சென்ற நிலையில் அந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.