மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளக்கேற்ற முயன்ற பெண்களால் பரபரப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளக்கேற்ற முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-12-11 15:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா பூமலூர் பகுதிக்கு உட்பட்ட கோகுலம் கார்டன் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த எட்டு வருடங்களாக அப்பகுதியில் தெரு விளக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை, முறையான சாலை வசதி , சாக்கடை வசதி , குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்தனர். மனு அளிக்க வந்த பெண்கள் திடீரென தங்கள் பகுதியில் தெரு விளக்கு வசதிகள் இல்லாததால் இருட்டிலேயே வாழ்வதாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மண் விளக்கு ஏற்ற முயன்றனர்.

  இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனு அளிக்க அழைத்துச் சென்றனர். இதனால் ஆட்சியில் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News