பழைய குற்றாலத்தில் இரும்பு கிரில் தடுப்பு அமைக்கும் பணி

பழைய குற்றாலத்தில் இரும்பு கிரில் தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்றது.

Update: 2024-05-29 09:15 GMT
பழைய குற்றாலத்தில் இரும்பு கிரில் தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்றது

தென்காசி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாக குற்றாலம் விளங்கி வருகிறது. இங்குள்ள பழைய குற்றால அருவியில் கடந்த 17ம் தேதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அஸ்வின் என்ற சிறுவன் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அருவிக் கரையின் ஆற்றுப்படுகையில் இரும்பு கிரில் தடுப்பு அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் அங்கு வந்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து செல்வதற்கு பாதுகாப்பு அளித்து தந்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News