வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்.

ராசிபுரத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்.

Update: 2023-12-21 13:57 GMT

ராசிபுரம் பொன்வரதாஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் பங்குபெறும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, 50 ஆயிரம் லட்டு தயார் செய்யும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டுத்தெருவில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி வரும் 2023 டிசம்பர் 23 -ம் தேதி காலை, 5:00 மணிக்கு நடக்கவுள்ளது. இதில் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரம் மக்கள் சொர்க்கவாசல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இதையொட்டி, ராசிபுரம் ஜனகல்யாண் அமைப்பினர் 33-ம் ஆண்டாக பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க தயார் செய்யும்- பணியில் ஈடுபட்டுள்ளனர். 1,500 கிலோ கடலை மாவு: 1500 கிலோ சர்க்கரை, 500 கிலோ நெய், 500 கிலோ கடலை எண்ணெய் 50 கிலோ முந்திரி ஏலக்காய் 25 கிலோ திராட்சை ஆகியவற்றை கொண்டு 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

30 தொழிலாளர்கள் லட்டுகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ள நிலையில் இந்த ஏற்பாடுகளை ஜன கல்யாண் அமைப்பினர் 33 -ம் ஆண்டு படைப்பாக இயற்க்கையான முறையில் செய்து வருவது குறிப்பிடதக்கது. ராசிபுரம் சௌராஷ்ட்ர விப்ரகுல சமூக சபா பஜனை மடத்தில் பூஜை செய்து லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டது. இதில் ஜனகல்யாண் தலைவர் S.M.R.பரந்தாமன், செயலாளர் CK.ராமமூர்த்தி, C.K.சீனிவாசன், M.ராகவன், J.ஜெயபிரகாஷ், V.சிவராமன், S.I.சீனிவாசன், S.சௌந்தர்ராஜன், ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு லட்டு தயாரிக்கும் பணியை ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News