கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்ட வாலிபர் தற்கொலை
தூத்துக்குடியில் வங்கிக் கடன் வாங்கிய உறவினர் தலைமறைவானதால், ஜாமீன் கையெழுத்து போட்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
Update: 2024-01-12 01:37 GMT
போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முத்தையாபுரம் சுபாஷ் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சீனிவாசன் (37). கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவர் தனது உறவினர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வங்கியில் கடன் வாங்க ஜாமீன் கையெழுத்து போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த உறவினர் பணத்தை திருப்பி செலுத்தாமல் ஊரை விட்டு ஓடி விட்டாராம். இதையடுத்து வங்கி நிர்வாகம் பணத்தை கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மன வேதனையடைந்த சீனிவாசன் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) அலெக்ஸ்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.