நோயாளியிடம் செல்போன் திருட்டு - விரட்டி பிடித்த காவலர்கள்
சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளியின் செல்போனை திருடிய நபரை காவலாளிகள் துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
Update: 2024-02-09 03:51 GMT
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள இதய சிகிச்சை பிரிவில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த சிகிச்சை பிரிவில் உள்நோயாளி ஒருவரின் படுக்கையில் வைத்திருந்த செல்போனை மர்ம நபர் நைசாக திருடி சென்றார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் திருடன், திருடன் என்று சத்தம் போட்டனர். உடனே அங்கு பணியில் இருந்த காவலாளிகள் விரைந்து சென்று அந்த மர்ம நபரை பிடித்து ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினர். இதில் அவர் எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 37) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.