குடிநீர் திட்ட குழாய்கள் திருட்டு: பஞ்சாயத்து துணைத்தலைவர் கைது

வேலணம்பாளையம் பகுதியில் குடிநீர் திட்ட குழாய்களை திருடிய பருத்திப்பள்ளி பஞ்சாயத்து துணை தலைவர் உட்பட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-01-08 14:56 GMT

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்

மல்லசமுத்திரம் ஒன்றியம், பருத்திப்பள்ளி கிராமம், வேலணம்பாளையம் பகுதியில் தற்சமயம், பூலாம்பட்டி காவிரி குடிநீர் இணைப்பு திட்ட பணிகள் நடந்து வருகின்றது. இப்பணிகளுக்காக, ஆங்காங்கே பிளாஸ்டிக் ரோல் குழாய்கள் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சுமார் 6 மணிஅளவில், இந்த குழாய்கள் இணைப்பு திட்டத்தின் காண்ட்ராக்டர் கோவிந்தராஜன் வேலணம்பாளையம் வழியாக சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளரும், பருத்திப்பள்ளி பஞ்சாயத்து துணைத் தலைவருமான சுந்தரராஜன்36 மற்றும் டெம்போ டிரைவர் நந்தகுமார்27 ஆகியோர் பிளால்டிக்ரோல் குழாய்களை டெம்போவில் ஏற்றி உள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ந்து போன காண்ட்ராக்டர் கோவிந்தராஜன் எலச்சிபாளையம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விசாரணை செய்ததில், கோழிப்பண்ணை உரிமையாளர் (ம) பருத்திப்பள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரராஜன் வீட்டில் ஏற்கனவே மூன்று பிளாஸ்டிக் ரோல் குழாய்கள் திருடி சென்று வைத்துள்ளதும், நான்காவதாக ஒரு குழாய் திருடும்போது கையும் கழுவாமாக மாட்டிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. மேலும் சுந்தரராஜன் கொ.ம.தே., கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

எஸ்.ஐ., பொன்குமார் தலைமையிலான போலீசார், அவர்களை கைதுசெய்து, திருச்செங்கோடு சப் ஜெயிலில் அடைத்தனர். பஞ்சாயத்து துணை தலைவரே, குழாய்களை திருடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News