தேனி : 33 வது ஆண்டு நவராத்திரி திருவிழா..!
தேனி அல்லிநகரம் ஆரிய வைசிய மகாஜன சங்கம் சார்பில் 33 வது ஆண்டு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
By : King Editorial 24x7
Update: 2023-10-21 13:05 GMT
தேனி அல்லிநகரம் ஆரிய வைசிய மகாஜன சங்கம் சார்பில் 33 வது ஆண்டு நவராத்திரி திருவிழா தேனி வாசவி மஹாலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 7வது நாளாக 7 அடி உயரத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி, ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவி திருவுருவ சிலைகள் மஞ்சள் மற்றும் சந்தனத்தால் நிறுவப்பட்டு வழிபாடு நடத்தினர் இந்த நவராத்திரி திருவிழா நிகழ்ச்சிக்கு ஆரிய வைசிய மகாஜன சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகிக்க செயலாளர் சீனிவாசன் பொருளாளர் குமரேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி அனைத்தும் விழா கமிட்டி னர் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.