தென்காசி : 2 நாளில் 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தென்காசி, மற்றும் ஆலங்குளம் காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2024-06-28 05:29 GMT
கைது செய்யப்பட்டவர்கள் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய கொலை வழக்கின் இரண்டு குற்றவாளிகள் மற்றும் ஊத்துமலை காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் உட்பட 6 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்,

இந்நிலையில்  தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குத்துக்கல் வலசையில் கடந்த 06.06.24 அன்று நடைபெற்ற கொலை முயற்சி வழக்கின் குற்றவாளிகளான குத்துக்கல்வலசை பெருமாள் சாமி என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (27), வேதம்புதூர் கிழக்கு தெருவை சேர்ந்த லியாக்கத் அலி என்பவரின் மகன் அஜ்மல் அலி (24), குத்துக்கல்வலசை அழகு முத்து நகர் 1வது தெருவை சேர்ந்த பால்சாமி என்பவரின் மகன் குமார் (28) மற்றும் நேருஜி தெருவை சேர்ந்த ராமசுப்பையா என்பவரின் மகன் ரமேஷ் குமார் (23) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி 4 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News