தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு மீனவர்கள் கவலை
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை உயர்வு மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தும் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீனவர்கள் கவலை
By : King 24x7 Angel
Update: 2024-02-10 11:10 GMT
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை உயர்வு மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தும் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீனவர்கள் கவலை தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து. தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் நடைபெற்ற அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு தற்போது தான் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு அதிக அளவு மீனவர்கள் சென்றுள்ளனர். . இதன் காரணமாக இன்று சனிக்கிழமை ஆழ்கடல் மீன்பிடிப்புச் சென்ற குறைவான படகுகளே கரை திரும்பின இந்த படகுகளிலும் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டு காணப்பட்டது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியதால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது வஞ்சிரம் மீன் எனும் சீலா மீன் கிலோ 1000 ரூபாய் வரையும் விளைமீன் கிலோ 500 ரூபாய் வரையும் ஊழி மீன் கிலோ 450 ரூபாய் வரையும் பாறை கிலோ 400 ரூபாய் வரையும் அயிலேஷ் சூரை கிழவாலை ஆகிய மீன்கள் கிலோ 200 ரூபாய் வரையும் நண்டு ஒரு கிலோ 800 ரூபாய் வரையும் கீரி மின்சாலை கூடை 1200 ரூபாய் வரையும் விற்பனையானது. மீன்களுக்கு நல்ல விலை கிடைத்த நிலையில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.