அதிமுகவினரை போல டில்லிக்கு தவழ்ந்து போய் வந்தவர்கள் அல்ல

அதிமுகவினரை போல டில்லிக்கு தவழ்ந்து போய் வந்தவர்கள் அல்ல என முன்னாள் எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை கூறியுள்ளார்.

Update: 2024-02-09 06:17 GMT

 அதிமுகவினரை போல டில்லிக்கு தவழ்ந்து போய் வந்தவர்கள் அல்ல என முன்னாள் எம்.எல்.ஏ., சேலஞ்சர் துரை கூறியுள்ளார்.

கோவை: டெல்லியில் பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏகள் விமானம் மூலம் கோவை திரும்பினர். கோவை நிலையத்தில் பா.ஜ.கவினர் மேளதாளம் முழங்க அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.முன்னாள் எம்.எல்ஏக்கள் சேலஞ்சர் துரை,சின்னசாமி, ரத்தினம்,செல்வி முருகேசன் உள்ளிட்ட பலர் பா.ஜ.க துணை தலைவர் கே.பி.ராமலிங்கத்துடன் வந்திருந்தனர். இதனையடுத்து கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க துணை தலைவர் கே.பி .ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது தமிழகத்தைச் சார்ந்த 15 முன்னாள் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.புரட்சி தலைவர் எம்ஜிஆர் உடன் பணிபுரிந்த நேர்மையான முன்னாள் உறுப்பினர்கள் இன்று தூய ஆட்சியை தமிழகத்துக்கு பாஜகவால் மட்டும் தர முடியும் என்பதற்காக இணைந்துள்ளனர்.

இன்னொரு 30 ஆண்டு காலத்துக்கு தகுதி படைத்த ஆற்றலாக இருக்கக்கூடிய அண்ணாமலை கரத்தை வலுப்படுத்த, ஆலோசனைகள் சொல்லி, தங்களது அனுபவங்களை இளம் தலைவருக்கு ஊட்ட இவர்கள் பாஜகவில் இணைந்துள்ளார்கள் என தெரிவித்தார். இவர்களைக் மகிழ்ச்சியுடன் பா.ஜ.க வரவேற்கின்றது எனவும் தெரிவித்தார். வரும் 11 ம் தேதி ஜே.பி.நாட்டா தமிழகம் வரும்போது இன்னொரு பட்டியல் வெளியாகும் எனவும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு திமுக, அதிமுகவில் இருந்து நிறைய பேர் வரலாம் அதிமுகவில் இருந்து பாதி பேர் வரலாம் எனவும் தெரிவித்தார்.இன்னும் அதிமுக,திமுகவிலிருந்து பல்வேறு தடைகளை தாண்டி கதவை உடைத்து கொண்டு பாஜகவில் இணைய இன்னும் சில பேர் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். இதனைதொடர்ந்து பா.ஜ.கவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சேலஞ்சர் துரை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தேசியமும்,ஆன்மீகமும் கலந்து இந்திய நாட்டை பிரதமர் மோடி வழி நடத்தி செல்கின்றார்.கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் பா.ஜ.க இருக்கின்றது் இன்னும் அடுத்த பல ஆண்டுகள் பாஜக தான் ஆட்சியில் இருக்கும். எங்கள் அனுபவங்களை, பாஜக கட்சியில் இணைந்து மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவும், தொழிற்சாலைகளும், விமான நிலையங்களும், ஏழை,எஎளிய மக்கள் முன்னேற தேசிய நீரோட்டம் தான் சிறந்தது என உணர்ந்து அதில் பயணிக்க முடிவு செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

ஊழல் பட்டியல் வெளியிடும் இளம் தளபதி அண்ணாமலை தலைமையில் நாங்கள் பயணித்து அவரை கரத்தை வலுபடுத்துவோம் எனவும் ஒரு போதும் ஏழை எளிய மக்களை ஏமாற்றுபவர்களை விட மாட்டோம் மக்களை மேன்மைப்படுத்த வேண்டும் ஊழலில் இருந்து விடுபட வேண்டும், ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதற்காக இணைந்து இருப்பதாகவும் தெரிவித்தனர். எங்களை வயதானவர்கள் சொல்கிறார்கள் அப்படியெனில் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன்,எடப்பாடி,திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் இளமையானவர்களா என கேள்வி எழுப்பிய சேலஞ்சர் துரை நாங்கள் என்ன டெல்லிக்கு அவர்களை போல தவழ்ந்து போய் வந்தவர்களா ?இப்போதும் செயல் திறமை உள்ளவர்கள்தான் எனவும் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து பேசிய சிங்கநல்லூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி நிறைய தலைவர்களுடன் பழகி இருக்கிறேன் அவர்களில் அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது எனவும ஊழல் மலிந்த திமுக -அதிமுகவை ஒழிப்பதற்கு வந்திருப்பவர்தான் அண்ணாமலை எனவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News