தில்லை கோவிந்தராஜ பெருமாள் உற்சவம்
கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நடந்த மகாசங்கல்ப நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-02-25 07:22 GMT
கள்ளக்குறிச்சியில் புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை விஸ்வரூப தரிசனம், கோ பூஜையும் நடந்தது. தொடர்ந்து, சிவகாமி அம்மன் உடனமர் சிதம்பரேஸ்வரர் சன்னதியில் மூலஸ்தான மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உலக நலனுக்காக மகாசங்கல்பம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இந்த உற்சவத்தில் கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.