திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை

திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை

Update: 2024-03-01 14:07 GMT

திருச்செங்கோடு விவேகானந்தா பொறியியல் கல்லூரி மாணவிகள் சாதனை

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் சார்பாக அகில இந்திய அளவில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி ஹைதராபாத்தில் அமைந்துள்ள மணிபால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளின் ஆராய்ச்சி அறிவை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதிலும் ஐஐடி, என்ஐடி போன்ற தலைசிறந்த கல்லூரிகளில் இருந்து சுமார் 51,000 மாணவ மாணவியர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் ரோபோடிக்ஸ், ஆர்டிபிசியால் இன்டெலிஜென்ஸ் (AI), கணினி பயன்பட்டியியல், ஹார்ட் வேர், ஹெல்த்கேர் சிஸ்டம், போன்ற பல்வேறு துறைகளில் உள்ள 234 வகையான பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்காக இப்போட்டி நடை பெற்றது. ஹெல்த் கேர் சிஸ்டம் என்ற தலைப்பில் 306 படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன, இதிலிருந்து ஆறு சிறந்த ஆராய்ச்சி படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிப்போட்டி நடைபெற்றது. ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக மாணவ மாணவியர்கள் மணிபால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் நிபுணத்துவம் வாய்ந்த வழிகாட்டுதலுடன் தங்கள் படைப்புகளை உருவாக்கி சமர்ப்பித்தனர்.

இதில் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் டெக்னாலஜி துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஜீவிகா, ரிதன்யா, கனிஷ்காஸ்ரீ, தனஸ்ரீ, சுபஸ்ரீ, அத்திகப்பள்ளி கிருஷ்ணபிரியா, மருத்துவம் ஹெல்த்கேர் சார்ந்த பிரச்சனை குறித்து ஆய்வு செய்து அதற்கான சிறந்த தீர்வுகளை சமர்ப்பித்து ரூபாய் 1,00,000 முதல் பரிசை வென்றனர். விவேகானந்தா பொறியியல் கல்லூரியில் உள்ள இன்ஸ்டியூட் இன்னோவேஷன் கவுன்சில் ( IIC ) மூலமாக மாணவிகளின் ஆராய்ச்சி அறிவை வளர்க்கும் வகையில் பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் மாணவிகள் வெற்றிபெற உறுதுணையாக இருந்த துறை தலைவர், டாக்டர் மா.சாய்குமார், பேராசிரியர்கள் டாக்டர்.மணிகண்டன், ராஜேஸ்வரி, பவுசியா மற்றும் வெற்றிபெற்ற மாணவிகள் ஆகியோரை விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் பேராசிரியர் டாக்டர் மு.கருணாநிதி , விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் குப்புசாமி முதன்மை நிர்வாகி மீ.சொக்கலிங்கம் முதல்வர் டாக்டர் கே.சி.கே.விஜயகுமார் ஆகியோர் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News