திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்ககை

திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்ககை நடைபெறுகிறது.

Update: 2024-05-18 10:45 GMT

மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு மாணவர் சேர்ககை நடைபெறுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (COPA), நில அளவையாளர் (SURVEYOR),  மின்சார பணியாளர் (ELECTRICIAN), இயந்திர வேலையாள் (MACHINIST),  ஆகிய நான்கு தொழில் பிரிவுகளிலும் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்களது கல்வி மற்றும் சாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம்; ரூ.50/-, நேரில் வர இயலாதவர்கள் செலுத்தி ஆன்லைன் மூலம் www.skill training.tn.gov.in  என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியின் போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/-, கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா  சீருடை (தையற்கூலியுடன்), விலையில்லா மிதிவண்டி, விலையில்லா வரைபடக் கருவிகள்,

விலையில்லா மூடுகாலணிகள், அரசு பள்ளியில் பயின்ற மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ 1000/- வழங்கப்படும்.   இந்த பயிற்சிக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க  ஜீன் 7- ம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே திருச்சுழி சுற்றுவட்டாரங்களில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும்,

மேலும் விபரங்களுக்கு 95788-55154. 70100-40810. 95669-29663 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News