சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

Update: 2023-12-26 16:19 GMT

சிறப்பு பூஜை 

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். ஆருத்ரா தரிசன முதல் நாளான இன்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சுகவனேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

முன்னதாக மூலவர் சிவபெருமானுக்கும் சொண்ணாம்பிகை தாயாருக்கும் பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களை கொண்டு சிவனுக்கும் அம்பாளுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்தியான சிவபெருமானும், சொர்ணாம்பிகை தாயாரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருள செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பக்தர்கள் முன்னிலையில் திருமாங்கல்யத்தை காண்பித்து சிவபெருமான் சொர்ணாம்பிகை தாய்க்கு மாங்கல்ய தாரணம் வைபவம் நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தின் போது பக்தர்கள் ஹர ஹர மஹாதேவ் ஹர ஹர மஹாதேவ் என கோஷங்கள் எழுப்பினர். இந்த திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News