திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Update: 2024-04-03 10:19 GMT

பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் 

செங்கத்தில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாஜக மாவட்டத் தலைவர் பாலசுப்பரமணியன் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார். மாவட்ட துணைத் தலைவர் சேகர் வரவேற்றார். கூட்டணிக் கட்சியான அமமுக மாவட்டச் செயலர் பரந்தாமன், பாமக மாவட்டச் செயலர் பாண்டியன் ஆகியோர் வேட்பாளரை அறிமுகப்படுத்தி கட்சி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் குறித்துப் பேசினர்.
Tags:    

Similar News