திருவண்ணாமலையில் நரித்தோலில் தாயத்து தயாரித்தவர் கைது
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் நரி தோலை பயன்படுத்தி தாயத்து தயாரித்து கொடுத்த நபரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்த வனத்துறையினர்.
Update: 2023-11-29 05:35 GMT
தி.மலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில வெளிநாடுகளில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையார் தரிசனம் செய்து கிரிவலம் வந்தனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வெப்பம்பட்டு தாலுக்கா எறையூர் சர்க்கரை ஆலை காமராஜர் நகர், நரிக்குறவர் காலனி பகுதியைச் சேர்ந்த டாம் கார், இரட்டை பிள்ளையார் கோவில் அருகே நரித்தோலை வைத்து தாயத்து தயாரித்து விற்பனை செய்து வந்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் உதவி வன அலுவலர் வினோத், வனச்சரக அலுவலர்சரவணன் மற்றும் வன பணியாளர்கள் இணைந்து கையும் களவுமாக பிடித்து அவர் பயன்படுத்திய நரி தோலை பறிமுதல் செய்து வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து டாம் காரை வேலூர் சிறையில் அடைத்தனர்.