ராஜ துர்க்கை அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா

திருவாரூர் ராஜதுர்க்கை அம்மன் கோவில் சண்டி மகா யாக பெருவிழாவையொட்டி புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2024-04-22 06:14 GMT

ராஜதுர்க்கை அம்மன்

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட திருமஞ்சண வீதியில் அருள்மிகு ராஜ துர்க்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சண்டி மகாயாக பெருவிழா கடந்த 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக ராஜ துர்க்கை அம்பாள் புஷ்ப பல்லக்கு வீதி உலா தெற்கு வீதி மேல வீதி வழியாக ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News