திருவாசகத்தை 1263 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் எழுதி வெளியீடு

உலகத் திருமறையான திருவாசகத்தை 1263 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் எழுதி, ஊர்வலமாக எடுத்துச் சென்று வெளியிடப்பட்டது.

Update: 2023-12-21 09:09 GMT

12 உலக திருமறைகளில் 8ம் திருமறையாக உள்ள திருவாசகத்தை திருஞானசம்பந்தர் இயற்றினார்.1263 ஆண்டுகளுக்குப் பிறகு திருவாசகம் நூல் பிரம்ம ஞானப்படி இயற்றப்பட்டுள்ளது. இதுவே முதல் முறை ஆகும் இதுவரை இலக்கியம் மற்றும் பக்தி அடிப்படையில் ஏற்றப்பட்ட திருவாசகம் நூல் பிரம்ம ஞானத்தின்படி எழுதப்பட்டுள்ளது.

உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம் என்னும் தலைப்பில் பிரம்ம ஞான பொற்சபை குருகுலம் சார்பில் பிரம்ம ஞான சத்குரு டாக்டர் ருத்ர சிவதா நூலை எழுதியுள்ளார்.

இந்நூலை பிரம்ம ஞான பொற்சபை குரு குலத்தினர் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள சண்முகா மருத்துவமனை நுழைவு வாயிலில் இருந்து தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். பின்னர் நூலை தவத்திரு வாத ஊரடிகள் தர்மமிகு சென்னை சிவலோகத் திருமணம் திருவாசகத்தை பாடி நூலை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பிரம்ம ஞான பொற்சபை உறுப்பினர்கள் மற்றும் சிவனடியார்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News