தூத்துக்குடி : புதிய கூடுதல் ஆட்சியர் பொறுப்பேற்பு
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலராக புதிய கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Update: 2023-12-29 02:04 GMT
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலராக புதிய கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார். கடலூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா, ராமநாதன் இந்தியாவின் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர். அவர் 2019 ஆம் ஆண்டு UPSC தேர்வில் 24 வயதாக இருந்தபோது அகில இந்திய தரவரிசையில் (AIR) 47 தேர்ச்சி பெற்றார். 2017 ஆம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்.