தூத்துக்குடி மாணவர்கள் கணிதத்தில் உலக சாதனை
மிகக் குறைந்த நிமிடத்தில் கணிதக் கணக்குகளை தீர்வு செய்து தூத்துக்குடி மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்
Update: 2024-03-09 07:36 GMT
பெங்களூரை சார்ந்த இன்னோவெடிவ் சொலுஷன்ஸ் (Innovative Solutions) மற்றும் தூத்துக்குடியைச் சார்ந்த மேஜிக் மேத் (Magic Math) சேர்ந்து கணிதத் தொகைகள் தீர்க்கப்படுவதில் சுமார் 50 மாணவர்களை இணைத்து உலக சாதனை நிகழ்த்தியது. இதில் உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் இணையவழி மூலமாக பங்கேற்றனர். இதில், மிகக் குறைந்த நிமிடத்தில் Finger Math முறையில் கணிதக் கணக்குகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்து முடித்தனர். World Wide Book Of Records பெங்களூரை சார்ந்த உலக சாதனையாளர் மற்றும் Dream Catcher நிறுவனத்தின் தலைவர் சிந்துஜா வினித் நடுவராக இருந்து நிகழ்வை கண்காணித்து மாணவர்களை பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை செல்வமணி சதீஷ் சிறப்பாக செய்திருந்தார். மேஜிக் மேத்தின் நிறுவனரும், அபாகஸ் பயிற்றுநருமான ஆனந்தி தங்கசாமி தூத்துக்குடியில் 17 வருடமாக அபாகஸ், வேதிக் மேத் பயிற்சிகளை தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கொடுத்து வருகிறார். அரசு பள்ளி மாணவர்கள் இவரிடம் இலவசமாக பயிற்சி பெற்று பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.