நீடாமங்கலம் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது
மன்னார்குடி நீடாமங்கலம் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-12 10:19 GMT
திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது
மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மன்னார்குடி அக்கறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் மகன் விஜய் என்பவர் கைது செய்யப்பட்டு அவர் திருடி சென்ற ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.நீடமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 3 இடங்களில் பம்ப் செட் வயர் திருடப்பட்ட நீடாமங்கலம் காங்கேயம் திடல் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் உதயகுமார் மற்றும் காளியப்பன் என்பவரின் மகன் சின்ராசு ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூபாய் 6000 மதிப்பிலான ஒயர் பறிமுதல் செய்யப்பட்டது.