நெய்தல் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளர்கள் - வாசகர்கள் இயக்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2023-12-04 17:02 GMT

தூத்துக்குடியில் நெய்தல் எழுத்தாளர்கள் - வாசகர்கள் இயக்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி லசால் பள்ளி தேர்மாறன் நினைவிடத்தில் மன்னர் தேர்மாறனின் 270ஆம் பிறந்த நாள் விழா, மூன்று நூல்கள் வெளியீட்டு விழா, அம்பா பதிப்பகத்தின் பத்தாண்டு நிறைவு என முப்பெரும் விழா நடைபெற்றது. பனிமய மாதா பேராலய அதிபர் அருள் குமார்ராஜா ஆசியுரை வழங்கினார். கடலோர ரோட்டரி மன்றத்தின் பொருளாளர் யோகேஷ் தலைமை தாங்கினார் . தொழிலதிபர் மெரிண்டோ வில்லவராயர், பெரியதாழை சுரேஷ் ஜானி மோத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் எழுதிய பனிகோர்த்த மாலை நூலை தொழிலதிபர் லினோவெளியிட, அமலிநகர் பிரேசில் பெற்றுக் கொண்டார். நூலை வ.உ.சி. கல்லூரியின் பேரா. ஜாக்ஸன் அறிமுகம் செய்தார். வெனான்சியுஸ் ரொட்ரிக்ஸ் எழுதிய தூவானத்து மின்மினிகள் நூலை, மணவை ரூஸ்வெல்ட் வெளியிட, தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு தொழிலாளர் சங்கத்தின் செயலர் ஜவகர் பெற்றுக்கொள்ள, ஆசிரியை லூடா ஜெயமேரி அறிமுகம் செய்தார். நெய்தல் அண்டோவின் 20ஆவது நூலான நீரோடை இராகங்கள் எனும் கவிதைத் தொகுப்பை, புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் ஹென்றி ஸ்டீபன்சன் வெளியிட, வ.உ.சி துறைமுக சபையின்ஜான் கென்னடி ராஜன் பெற்றுக்கொள்ள, ஆசிரியர் அமிர்தராஜ் நூலை அறிமுகம் செய்து பேசினார். நிகழ்வில் கவிஞர் நெல்லை தேவன், பீட்டர் பர்னாண்டஸ், இந்திய மீனவர் சங்கத்தின் ராஜு பரதவர், அண்டோ, போஸ்கோ, ஆலந்தலை அலன் ஹார்ட்டி, ஆசிரியர் சேவியர் புர்னோ, ஜுபின் ஜார்ஜ், ஜான் பி.ராயர்மற்றும் வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நெய்தல் எழுத்தாளர் இயக்கத்தின் பொருளாளர் தேவானந்த் வரவேற்புரை நிகழ்த்தினார். நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான நெய்தல் அண்டோ நன்றியுடன் ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்வை ஆசிரியர் ஸ்பெல்மென் தொகுத்து வழங்கினார்.விழாவுக்கான ஏற்பாடுகளை நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர்கள் இயக்கமும், அம்பா பதிப்பகமும் இணைந்து செய்திருந்தனர்.
Tags:    

Similar News