புள்ளம்பாடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு பயிற்சி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-06-23 10:34 GMT
புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் புள்ளம்பாடி ஊரக வளர்ச்சித் துறையும் இணைந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.

இதில் குளோரினேசன் செய்முறை செய்து காட்டியும் மற்றும் பருவ கால நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த பயிற்சி கூட்டத்திற்கு வட்டார மருத்துவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட நலக் கல்வியாளர் ராகவன் கலந்து கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்களின் பணி செயல்பாடுகள் குறித்தும், ஊரக பணியாளர்களின் பணிகள் குறித்தும் விளக்கி கருத்துரையாற்றினார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அருணாசலம் வரவேற்று பேசினார்.முடிவில் சுகாதார மேற்பார்வையாளர் ஹரிராவ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News