திருப்பூரில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 70,000 பறிமுதல்.

திருப்பூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 70,000 பணத்தை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-21 07:09 GMT

பணம் ஒப்படைப்பு 

 திருப்பூர்   காங்கயம் சாலை, பெம் பள்ளி அருகில் உள்ள  செக் போஸ்ட் சோதனையில் வணிக வரித்துறை செல்வ சங்கர் தலைமையில்  வாகன தணிக்கையின் போது திருப்பூர், எம். ஜி. புதூர், 2வது வீதியை சேர்ந்த தி.வி. சண்முகம் மகன் V.S சந்திரகுமார் என்பவர்  சென்ற நான்கு சக்கர  வாகனத்தினை சோதனை செய்த போது வாகனத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரொக்கம் ரூ.70,000/- கொண்டு வந்தது தெரியவந்தது. அதற்குண்டான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு கொண்டு செல்லலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் கூடுதல் பறக்கும் படை குழு, பறிமுதல் செய்து திருப்பூர் மாநகராட்சி ஆணையாளருக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News