TVK தவும் திமுக கவுன்சிலர் கடைசி நேரத்தில் தாமதம் ஆதங்கத்தில் TVK மாவட்ட நிர்வாகி
புதுக்கோட்டை தமிழக வெற்றி கழக மாவட்ட அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் பர்வேஸ் முன்னிலையில் 33 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி இணையும் விழா நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் தாமதாம்;
புதுக்கோட்டை தமிழக வெற்றி கழக மாவட்ட அலுவலகத்தில் மத்திய மாவட்ட செயலாளர் பர்வேஸ் முன்னிலையில் 33 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி இணையும் விழா நடைபெற இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ஆளுங் கட்சியினரின் அழுத்தம் காரணமாக இணைய விடாமல் தடுத்து வருவதாகவும், இன்னும் மூன்று கவுன்சிலர்கள் தன்னிடம் த வெக- வில் இணைவதற்காக பேசி வருவதாகவும் தவெக மாவட்ட செயலாளர் பர்வேஸ் பரபரப்பை கிளப்பியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள தமிழக வெற்றி கழக அலுவலகத்தில் திமுக கவுன்சிலர் இணைப்பு விழா மற்றும் புத்தாண்டு விழாக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. காலை 10.30 நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் திமுக கவுன்சிலர் தவெக அலுவலகத்திற்கு வரவில்லை. தவெக நிர்வாகிகளின் அழைப்பையும் ஏற்கவில்லை. இதனால் தவெகவினர் நீண்ட நேரம் காத்திருந்தும் திமுக கவுன்சிலர் வருகை தரவில்லை. செய்தியாளர்களை சந்தித்த மத்திய மாவட்ட செயலாளர் பர்வேஸ், திமுக மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் இல்லை, சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என கடந்த மூன்று மாதங்களாக தவெகவில் இணைவதாக கேட்டுக்கொண்டார். இன்று காலை வரை தன்னிடம் பேசிக் கொண்டிருந்தார், அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பே ராஜேஸ்வரி தவெக உறுப்பினராக இணைந்துள்ளார். ஆனால் இன்றைக்கு முறைப்படி தலைமையில் அனுமதி பெற்று இணைவு விழா நடைபெற இருந்தது. தற்போது ஆளுங்கட்சியின் அழுத்தம் காரணமாக வர முடியாமல் உள்ளார். திமுக கவுன்சிலர் அவரது வார்டில் உள்ள 30 பேரை தவெகவில் உறுப்பினராகவும் இணைத்துள்ளார். ராஜேஸ்வரிக்கு தமிழக வெற்றி கழகத்தில் இணைவதற்கு அதிக விருப்பம் உள்ளது. ஏனென்றால் அவர் குடும்பத்தில் அனைவருக்கும் தளபதியை பிடிக்கும் என்பதால் இணைவதற்கு விருப்பமாக இருந்தார். அவரை திமுகவினர் இப்போது வரை இணைய விடவில்லை. திமுகவில் மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகள் தவெகவில் இணைய கூடாது என அழுத்தம் கொடுத்து தடுத்து வைத்துள்ளனர். இதற்குப் பிறகு ராஜேஸ்வரியின் முடிவை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மட்டும் இல்லாமல் இன்னும் மூன்று கவுன்சிலர்கள் தன்னிடம் பேசிக் கொண்டு உள்ளனர். அவரை இணைவதற்கு பிறகு அடுத்தடுத்து இணைவதற்கான ஏற்பாடு செய்ய இருந்தது எனக் கூறினார்.