இந்திய விமான நிலை ஆணையத்தில் காலி பணிஇடங்கள்

இந்திய விமான நிலையத்தில் காலி பணிஇடங்கள் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு.

Update: 2024-01-19 09:24 GMT

இந்திய விமான நிலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு  

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) குரூப்-சி நிலையில் ஜூனியர் அசிஸ்டென்ட் (தியணைப்பு மற்றும் அலுவல்) மற்றும் சீனியர் அசிஸ்டென்ட் (எலக்ட்ரானிக் மற்றும் கணக்கு) என 4 வகையான பணிகளுக்கு 119 காலியிடங்களை கணினி வழி எழுத்துத்தேர்வு வாயிலாக தெற்கு பிராந்தியத்தின் AAI க்காக நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் 75 காலியிடங்கள் ஜூனியர் அசிஸ்டெண்ட் மற்றும் 44 காலியிடங்கள் மூத்த உதவியாளர் பணியிடங்கள் ஆகும். இந்த ஆட்சேர்ப்பு 2024க்கு தென் பிராந்தியங்களில் (தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகள்) வசிக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்லைனில் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.aai.aero/ 26.01.2024 कंकनां गांमकिंक प्राप्राक, 18 फक्र 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் விளக்கு உண்டு. மேலும் கல்வித்தகுதி, உடல் தகுதி தேர்வு. உடல் தரநிலை தேர்வு. கணினி அறிவு தேர்வு போன்ற இதர விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பை காணலாம். தேர்விற்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூபாய் ஆயிரம் ஆகும். ஆனால் பெண்கள். எஸ்சி, எஸ்டி பிரிவினர். முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கணினி வழி எழுத்துத் தேர்வானது தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறும். மேலும் மேற்கண்ட விளம்பர அறிவிப்பு குறித்து மேலும் விளக்கங்கள் பெற நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04365252701 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News