வேன் பைக் மீது மோதி விபத்து

Update: 2023-11-06 15:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா சீத்தப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி வயது 42. இவர் நவம்பர் மூன்றாம் தேதி காலை 11 மணியளவில் திண்டுக்கல் -சேலம் சாலையில் உள்ள சுக்காலியூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகா தாளப்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்த வேன், கிருஷ்ணமூர்த்தி ஓட்டிச் சென்ற டூவீலரை முந்தி வேகமாகச் முன்னாள் சென்றது. அப்போது, எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், திடீரென வேன் பிரேக் போட்டதால் பின்னால் வந்த கிருஷ்ணமூர்த்தி டூ வீலர், வேனின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு தலை, முன் நெற்றி, கன்னம், வலது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி அளித்த புகார் பேரில் தாந்தோனிமலை காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News